சில்லெனக் காற்றும், சின்னஞ்சிறுத் தூறலும்
சாலை விதியும், சலசல நதியும்
மறந்துப் போன இருளும் - மறையாது
தோன்றும் ஒளியும்; மக்கள் குணமும்
மாறு பட்ட இம் மொழியும்
வயதைத் தளிர்த்த உடலும், உதவிட
துடிக்கும் உள்ளமும் இந்நாட்டின் சிறப்பு!!!!!
- என்னைக் கவர்ந்தன.
உயிரில் நிறைந்த என் உறவும்
எம்மைச் சூழ்ந்தே இருக்கும் நட்பும்
டீ கடையும், பஜ்ஜியும் - நான்
தங்கி யிருந்த PG யும்
மக்கள் பெருக்கும், பேருந்தில் படியும்
வாய்ச் சண்டையும், வாகனப் புகையும்
கோடை வெயிலும், வியர்வைத் துளியும்
தாகம் தணிக்கும் தண்ணீர்ச் சுவையும்..
- என்னுள் இழந்தன
இது என் அன்றாட வாழ்வில் நான் உணர்ந்தவை.
இங்கு நார்வே யிலும் அங்கு சென்னை யிலும்.......,
குறிப்பு PG என்பது Paying Guest. தங்கும் விடுதி போல..,
தினகரன்...,

Gud one... Foreign pona ovvoruthoda peelings in reflection gud job expect more frm u
ReplyDeleteThanks Bro..., Sure i ll write more.
ReplyDeleteSuperb dude :) Kalakita..
ReplyDeleteநன்றி தமிழன் முபாரிஷ்...,
ReplyDeleteஉங்கள் உதவியே எனக்கு இந்த Blog எழுத
வித்திட்டது.