Monday, November 16, 2015

காதலும் கற்பனையும்...

ஒத்த விழிப் பார்வ

ஓராயிரம் எண்ணங்கள் !

ஒண்டி ஒண்டிப் பார்க்கவில்ல

ஒரு வார்த்த பேசவில்ல!!

ஒரு தடவ நீ பார்த்தா

ஒளி வட்டம் தெரியுதடி

ஓட்ட போட்டு என்நெஞ்சில்

ஒளிந்திருந்த பொக்கிஷமே

ஒரு வார்த்த நீ சொல்லு

ஓடிப் போய் கட்டிக்கலாம்!!!!!


Sunday, October 14, 2012

வினா கண்டேன் விடையைத் தேடி - எப்படி!!!!!


மழையும் மண்ணும் சேராமல் இருக்க
வயலும் விவசாயியும் சேர்வது - எப்படி?

தமிழும் கன்னடமும் இணையாமல் இருக்க
தஞ்சைக் கோடிக்கு தண்ணீர் - எப்படி?

உழவன் கால்களுக்கு வேலையற்றுப் போக
உணவு உற்பத்திக்கு வழி - எப்படி?

உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு பெருக
பணத்தை வைத்து பசியைதீர்ப்பது - எப்படி?

வீதியில் வாழும் மனிதர்கள் இருக்க
வல்லரசு என்ற எண்ணம் - எப்படி?

அரசியல்வாதிகளின் வங்கிக் கணக்கு பெருகிக்கிடக்க
அந்நி முதலீட்டின் அவசியம் - எப்படி?

அறிமுகமில்லா அரசியல் தன் தொழிலென எண்ணும்
இளைஞர் மாறும் காலம் - எப்படி?

மாற்றம் ஒன்றே மாறாத போது
மகிழ்ச்சியை மட்டும் நாடும் மனது - எப்படி?

வாலிப வயதில் வருவதும் போவதும்
மனவலியது மறந்திட மறுப்பது - எப்படி?

அணைக்கின்ற கரங்கள் உனக்கென வாழ்ந்திட
அடுத்தவன் கைக்கோர்த்திட நினைப்பது - எப்படி?

காதல் திருமணங்கள் தோற்றுக்கொண்டே போக
காதல் வார்த்தைக்கு அர்த்தம் - எப்படி?

உனக்கென ஒரிதயம் இயங்கிக் கொண்டிருக்க
உள்ளே ஒருவர் குடிகொள்வது - எப்படி?

உணர்ச்சிக்கு ஒரு வாய்மொழி இல்லாதபோது
உள்ளம் கொண்ட போருள்மட்டும் - எப்படி?

திறந்திடு மனமே துணிந்திடு இனியுன்
திசைக்கண்டு நகர்ந்திட விரைந்திடு - எப்படி?

எப்படியென்ற எண்ணம் உனக்குள் தோன்றிட
உன்னைநீ மாற்றிட முயன்றிடு - எப்படி?

வாழ்வது உன் வாழ்கை உன்
எண்ணப்படி இல்லாமல் வேறு எப்படி?

Sunday, October 7, 2012

நான் கண்ட மெட்ராஸ் பீச் 1 FACE

மாறி வரும் பருவ நிலை
மாறாது நிற்கும் ஏள்மை நிலை

மாலை நேரக் கடற்க்கரை காற்று
சாலை தோறும் பூந்தளிர் மொட்டு

ஆட்பரிக்கும் அலைக்கோர் அர்த்தமுண்டு - வஞ்சியவள்
வட்டமிடும் பார்வைக்கோர் அர்த்தமுண்டு

காதல் ஜோடி ஒன்று கண்டேன்
நாணலும் இல்லை இருவருள்ளும் நளினமுமில்லை

சூரியன் மறைந்ததும் சுற்றமும் சூழ்ந்தது

கால்கலை நனைத்தனர் சிலர்
கைகளைக் கோர்த்தனர் பலர்!!!!!


Sunday, March 25, 2012

இலங்கை தமிழரே!!!

உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தும்

இழந்து போன என இலங்கைத் தமிழரே!!!

உனக்காக என பேனா வரிகள் - நான்

தமிழன் என்பதால் அல்ல - மனிதன் என்பதால்!!!!

இதை நான் முன்வைக்க காரணம், ஊடகத்தின்

பார்வைக்கு இது மட்டும் தான் தெரியும்!!!

இன்றைய ஊடகங்களின் எழுதுகோளுக்கு

உயிரைவிட உருவத்திற்கு தான் விலைமதிப்பு

அதிகம், தன் வியாபாரத்தை பெருக்கி கொள்ள....


என் இலங்கைத் தமிழனே - நீ எப்படி

வாழ்ந்தாய், எவ்வாறு வளர்ந்தாய்

புலிகள் நல்லவனா கெட்டவனா - என

எதுவும் எனக்கு தெரியாது - ஏனென்றால்

அனைத்தும் ஊடகத்தின் கலவையே!!!

நீ விட்ட கணணீர் தெரியும்

கதறி அழுத வலி புரியும்

இதையும் ஊடகம் வாயிலாகதான் கண்டேன்..

என் உணர்விற்கு உயிரிட்டேன் - எழுத்து மூலமாக

உனக்காக குரல் கொடுக்கும் - அமெரிக்கன்

ஒரு சுயனலவதியே - ஆயினும்

அவன் குரலுக்கு ஆதரவளிக்க

மனம் தூண்டுகிறது - காரணம்

இதனால் உனுக்கு ஏதேனும் பலன் கிடைக்காதா என்று.!!!!!



என் இந்திய தேசமே - ஆசிய

நாடுகளின் ஒற்றுமைக்கும் அண்டைநாட்டுப்

பிரச்சனைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.!!!!

உன் கருத்தை வெளியிட

ஒருவனுக்கும் அச்சப்பட தேவயும் இல்லை!!!!



மக்களின் மன ஏக்கத்தையும்

உணர்ச்சியையும் கவருவதே தன்

குரிக்ககோள் எனக் கருதும் ஊடகங்களே

நாளைய சமுதாயம் உண் கருத்தைப்

பார்க்கும், படிக்கும் என்பதை மறந்திடாதே!!!!


உன் கருத்தை சகப்போடியாலனை விட

வேறுபடுத்திக் காட்ட எப்படி துடிக்கிறாயோ

அதைவிட உண்மையை காட்ட முற்படு

மக்களின் உணர்ச்சித் தூண்டலை குறிக்கோளாகக் கொள்ளாதே!!!!

என் உணர்ச்சித் தூண்டளுக்கு காரணமான

TIMES OF INDIA நாளிதழின் பின்வரும் பதிப்பான

CHENNAI FORCES INDIA TO SPLIT FROM ASIA, CENSURE SRI LANKA
23 MAR 2012, 8.52 AM IST, INDRANI BAGCHI, TNN

ஒரு வேண்டுகோள்!!!!!!!

எழுத்துப்பிழையோ, எண்ணப்பிழையோ


இருந்தால் குறிப்பிடவும்!!!!!!










Saturday, January 14, 2012

வீடும் வாசலும்!!

வாசற்படியோரத் தாயின் நிழல் - ஒரு புறம்!!!!!

தரக்புரக்கென ஆடும் தந்தையின் நார்காழி - மறு புறம்!!!!


ஓலைக் குடிசையும் ஒருபானைச் சோறும்!!!

நாக்குச் சொட்ட ருசிக்கும் நெத்திலிக்கருவாடும்!!


தவித்த வயிரிருந்தும் தாகந்தீர்க்க மோரிருந்தும்

விளையாடச் (வெளி நாடு) சென்றமகன் வீட்டுக்கு திரும்பலையே!!


ஒழிந்திருந்த வட்டநிலா உருவெடுத்து வந்துப்புட்டான்

தரியோட்டச் சென்றமையன் தரணிக்கு திரும்பலையே!!!!


மாலை வெயில் மறைந்துப் போனாலும்!!

வடிச்ச கஞ்சி ஆரிப் போனாலும்!!!


இரவு உணவுக்கு வீட்டுக்கு வருவேன் - என்று

கணத்துப் பேசிய என் மகன் எங்கே!!!!!



- சில எண்ணங்கள் என் வீடு நோக்கி!!!!

Sunday, August 21, 2011

நினைவும் - நிழலும்



இமைகள் இணைந்த பின்னும் 
கண்கள் உறங்குவதில்லை!  -  கனவில்!!


கனவுகள் களைந்தப் பின்னும்
காவியம் முடிவதில்லை!  -  கற்பனையில்!!


கற்பனை உடைந்தப் பின்னும்
ஏக்கம் களைவதில்லை!  -  மனதில்!!


மனது ஓய்ந்தப் பின்னும் 
ஞாபகம் விடுவதில்லை!  -  ஞானத்தில்!!


காலம் கடந்தப் பின்னும் 
காதல் மறைவதில்லை!  -  உன்னில்!!


உன்னுள் இருக்கும் இதயம் 
உன்னை இயங்கவிடுவதில்லை!  -  நிகழ்காலத்தில்!!


இருப்பினும் காலம் உனைக்காக்கும் 
நட்பு உள்ளவரை -  ஆம் 
உன் நண்பர்கள் உள்ளவரை!  -  எதிர்காலத்தில்!!


வாழக் கற்றுக்கொள் உன் 
நினைவோடும் நிழலோடும்!  -  என்றென்றும்!!






தினகரன்....,

Wednesday, July 27, 2011

என் தனிமையும்; நட்பின் நினைவும்.

என் தனிமை!!!

உறங்கா வேளையிலே உட்கார்ந்

திருந்தேன் என் அறையிலே!!

ஒருமணியாச்சு; விடுஞ்சும் போச்சு!

கண்ணசுருள காரணம் புரியல

இத் தனிமையின் விரக்தியை

என் நட்பின் தருணங்களோடு!!!!



நட்பின் நினைவு!!!

பட்டப்பேறு வெச்சுக் கூப்புட்டு

பன் னிரண்டு மாதமாச்சு

பல்துலக்கப் PASTE தேடும்

காலம் எங்கோ ஓடிப்போச்சு......


ஒரு சோற்றுப் பொட்டலத்த

ஒன்றினைந்துக் கைநினைக்க

ஒரு பருக்கும் மிஞ்சாது

ஒருத்தன் வயுறும் நம்பாது.!!!!


அந்திநேரம் செஞ்சக் கூத்து

ஒரு இரவும் தப்பாது!!!!

கடன் சொல்லி தம்மடிப்போம்

காபிக்குந்தான் CHEERS அடிப்போம்....

கட்டுப்பாடு என்ற ஒண்ணு

CUTTING குள்ள வந்ததில்ல!!!


ஒருத்தன் மட்டும் கடலைபோட

ஒருத்தன்விடாம ஒட்டுக் கேட்க்க.....

இழிச்சு இழிச்சுப் பேசுவான்

இம்சைக் கொடுத்தா திட்டுவான்!!!

இரவெல்லாம் இப்படியே போகும்

விடிந்தபின்னே தூக்கம் பிடிக்கும்!!!!


காலை விடியலும் காக்கை குழியலும்

நறுமணம் வீசிடும் நண்பனின் சட்டையும்

அழுக்கா இருந்தும் IRONபண்ண மறக்குல

அடுத்தவர் பொருளெனப் பிரிச்சும் பார்கல.,



கடுக்கும் வெயிலில் OFFICE போவோம்

கடுப்பா இருந்தா கட்டயப் போடுவோம்


EVENING பேசிய OFFICE FUNகள்

இருட்டில் பார்த்த ENGLISH FILMகள்

இப்படி நகர்ந்த FILTHY DAYS

இங்க இல்லையே FILTHY FRIENDS.


தினகரன்...,