Sunday, October 14, 2012

வினா கண்டேன் விடையைத் தேடி - எப்படி!!!!!


மழையும் மண்ணும் சேராமல் இருக்க
வயலும் விவசாயியும் சேர்வது - எப்படி?

தமிழும் கன்னடமும் இணையாமல் இருக்க
தஞ்சைக் கோடிக்கு தண்ணீர் - எப்படி?

உழவன் கால்களுக்கு வேலையற்றுப் போக
உணவு உற்பத்திக்கு வழி - எப்படி?

உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு பெருக
பணத்தை வைத்து பசியைதீர்ப்பது - எப்படி?

வீதியில் வாழும் மனிதர்கள் இருக்க
வல்லரசு என்ற எண்ணம் - எப்படி?

அரசியல்வாதிகளின் வங்கிக் கணக்கு பெருகிக்கிடக்க
அந்நி முதலீட்டின் அவசியம் - எப்படி?

அறிமுகமில்லா அரசியல் தன் தொழிலென எண்ணும்
இளைஞர் மாறும் காலம் - எப்படி?

மாற்றம் ஒன்றே மாறாத போது
மகிழ்ச்சியை மட்டும் நாடும் மனது - எப்படி?

வாலிப வயதில் வருவதும் போவதும்
மனவலியது மறந்திட மறுப்பது - எப்படி?

அணைக்கின்ற கரங்கள் உனக்கென வாழ்ந்திட
அடுத்தவன் கைக்கோர்த்திட நினைப்பது - எப்படி?

காதல் திருமணங்கள் தோற்றுக்கொண்டே போக
காதல் வார்த்தைக்கு அர்த்தம் - எப்படி?

உனக்கென ஒரிதயம் இயங்கிக் கொண்டிருக்க
உள்ளே ஒருவர் குடிகொள்வது - எப்படி?

உணர்ச்சிக்கு ஒரு வாய்மொழி இல்லாதபோது
உள்ளம் கொண்ட போருள்மட்டும் - எப்படி?

திறந்திடு மனமே துணிந்திடு இனியுன்
திசைக்கண்டு நகர்ந்திட விரைந்திடு - எப்படி?

எப்படியென்ற எண்ணம் உனக்குள் தோன்றிட
உன்னைநீ மாற்றிட முயன்றிடு - எப்படி?

வாழ்வது உன் வாழ்கை உன்
எண்ணப்படி இல்லாமல் வேறு எப்படி?

No comments:

Post a Comment