இமைகள் இணைந்த பின்னும்
கண்கள் உறங்குவதில்லை! - கனவில்!!
கனவுகள் களைந்தப் பின்னும்
காவியம் முடிவதில்லை! - கற்பனையில்!!
கற்பனை உடைந்தப் பின்னும்
ஏக்கம் களைவதில்லை! - மனதில்!!
மனது ஓய்ந்தப் பின்னும்
ஞாபகம் விடுவதில்லை! - ஞானத்தில்!!
காலம் கடந்தப் பின்னும்
காதல் மறைவதில்லை! - உன்னில்!!
உன்னுள் இருக்கும் இதயம்
உன்னை இயங்கவிடுவதில்லை! - நிகழ்காலத்தில்!!
இருப்பினும் காலம் உனைக்காக்கும்
நட்பு உள்ளவரை - ஆம்
உன் நண்பர்கள் உள்ளவரை! - எதிர்காலத்தில்!!
வாழக் கற்றுக்கொள் உன்
நினைவோடும் நிழலோடும்! - என்றென்றும்!!
தினகரன்....,
