Sunday, August 21, 2011

நினைவும் - நிழலும்



இமைகள் இணைந்த பின்னும் 
கண்கள் உறங்குவதில்லை!  -  கனவில்!!


கனவுகள் களைந்தப் பின்னும்
காவியம் முடிவதில்லை!  -  கற்பனையில்!!


கற்பனை உடைந்தப் பின்னும்
ஏக்கம் களைவதில்லை!  -  மனதில்!!


மனது ஓய்ந்தப் பின்னும் 
ஞாபகம் விடுவதில்லை!  -  ஞானத்தில்!!


காலம் கடந்தப் பின்னும் 
காதல் மறைவதில்லை!  -  உன்னில்!!


உன்னுள் இருக்கும் இதயம் 
உன்னை இயங்கவிடுவதில்லை!  -  நிகழ்காலத்தில்!!


இருப்பினும் காலம் உனைக்காக்கும் 
நட்பு உள்ளவரை -  ஆம் 
உன் நண்பர்கள் உள்ளவரை!  -  எதிர்காலத்தில்!!


வாழக் கற்றுக்கொள் உன் 
நினைவோடும் நிழலோடும்!  -  என்றென்றும்!!






தினகரன்....,

No comments:

Post a Comment