Sunday, July 24, 2011

நார்வேயில் நான்

பச்சை மரமும், வெள்ளைத் தோலும்

சில்லெனக் காற்றும், சின்னஞ்சிறுத் தூறலும்

சாலை விதியும், சலசல நதியும்

மறந்துப் போன இருளும் - மறையாது

தோன்றும் ஒளியும்; மக்கள் குணமும்

மாறு பட்ட இம் மொழியும்

வயதைத் தளிர்த்த உடலும், உதவிட

துடிக்கும் உள்ளமும் இந்நாட்டின் சிறப்பு!!!!!

- என்னைக் கவர்ந்தன.


உயிரில் நிறைந்த என் உறவும்

எம்மைச் சூழ்ந்தே இருக்கும் நட்பும்

டீ கடையும், பஜ்ஜியும் - நான்

தங்கி யிருந்த PG யும்

மக்கள் பெருக்கும், பேருந்தில் படியும்

வாய்ச் சண்டையும், வாகனப் புகையும்

கோடை வெயிலும், வியர்வைத் துளியும்

தாகம் தணிக்கும் தண்ணீர்ச் சுவையும்..

- என்னுள் இழந்தன



இது என் அன்றாட வாழ்வில் நான் உணர்ந்தவை.

இங்கு நார்வே யிலும் அங்கு சென்னை யிலும்.......,


குறிப்பு PG என்பது Paying Guest. தங்கும் விடுதி போல..,


தினகரன்...,

4 comments:

  1. Gud one... Foreign pona ovvoruthoda peelings in reflection gud job expect more frm u

    ReplyDelete
  2. நன்றி தமிழன் முபாரிஷ்...,

    உங்கள் உதவியே எனக்கு இந்த Blog எழுத

    வித்திட்டது.

    ReplyDelete